ஆசையாக ஸ்வீட் பப்ஸ் வாங்கியவரை கதிகலங்க வைத்த காட்சி - உயிருக்கே ஆபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பேக்கரியில் வாங்கிய ஸ்வீட் பப்ஸில் பூஞ்சை பூத்துக்கிடந்ததாக புகார் எழுந்துள்ளது.
தம்மம்பட்டியை சேர்ந்த கோகிலா என்பவர் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரியில் ஸ்வீட் பப்ஸ் உள்ளிட்டவற்றை வாங்கி தனது அண்ணன் வெங்கடேசனின் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். ஸ்வீட் பப்ஸை சாப்பிட எடுத்த போது அதில் பூஞ்சை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேக்கரிக்கு சென்று முறையிட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டது.