தமிழகத்தில் திடீர் சிபிஐ ரெய்டு.. கட்டு காட்டாக சிக்கிய பணம் - பரபரப்பை கிளப்பும் பின்னணி
சென்னை துறைமுகத்தை சேர்ந்த தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரியிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை உட்பட ஆறு இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. கப்பல்களை இழுக்கும் 4 இழுவை படகுகளை வாங்குவதற்கான டெண்டரை ஒதுக்குவதற்கு 70 லட்சம் ரூபாய் மூத்த துணை இயக்குனர் கேட்டது தெரியவந்துள்ளது. மேலும் போலியான அனுமதி ஆணையை வழங்கி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. துறைமுக அதிகாரி மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் பங்குதாரர் தரகர்கள் என ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது, 27 லட்சம் ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்கள், எலக்ட்ரானிக் ஆவணங்கள் சிபிஐ வசம் சிக்கியுள்ளது. தொடர்ந்து இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.