திடீரென இடிந்து விழுந்த காவலர்கள் குடியிருப்பு மேற்கூரை - ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பாட்டி
சென்னையில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், மூதாட்டி ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் பேச்சு முத்து என்பவர், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது தாய் சிதம்பரம், மகன், மருமகள் மற்றும் இரண்டு பேர குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகின்றார். உடல் நலம் முடியாமல் மூதாட்டில் வீட்டில் படுத்து இருந்த நிலையில், மதியம் 12:30 மணியளவில், குடியிருப்பின் மேற்கூரை திடீரென விழுந்தது. இதில் மூதாட்டி காலில் படுகாயம் ஏற்பட்டநிலையில் அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.