RTO ஆபீஸில் மாயமான பஸ்...இந்த விஷயம் நடந்தவுடன் அதே இடத்துக்கு வந்த பேருந்து
RTO ஆபீஸில் மாயமான பஸ்...இந்த விஷயம் நடந்தவுடன் அதே இடத்துக்கு வந்த பேருந்து
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மாயமான பேருந்தை மர்ம நபர்கள் மீண்டும் அதே இடத்தில் நிறுத்தினர்... பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையின் போது அதிகாரிகள் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணுடன் சுற்றி வந்த ஆந்திர பதிவெண் கொண்ட பேருந்தை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்து குடியாத்தம் மோட்டார் வாகன அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்து அபராதம் விதித்தனர். ஆனால் அபராதம் செலுத்தப்படாத நிலையில் பேருந்து மாயமானது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் பேருந்தை
பேருந்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பேருந்தை மர்ப நபர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.