ஒரு ஊரையே நடுங்கவிட்ட மரண ஓலம்..மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் | Kallakurichi

Update: 2024-12-27 07:50 GMT

சின்னசேலம் அருகே திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதாகும் நிர்மலா, கணவரை இழந்த நிலையில், குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்றிரவு பால் சொசைட்டியில் பால் ஊற்ற சென்ற நிர்மலா, வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை, அவரது வீட்டின் அருகே உள்ள சோளக்காட்டில், உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.

கணவரை இழந்த பெண் சோளக்காட்டில் கொல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திம்மாபுரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்