தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்ட தமிழ்நாட்டின் அரசு பள்ளி - 11 ஆண்டுகளாக 100% தேர்ச்சி - மாணவர்களுக்காக உதவும் இளைஞர்கள்

Update: 2024-05-11 02:22 GMT

100 விழுக்காடு தேர்ச்சியை நோக்கி ஓட்டம் எடுக்கும் பந்தயத்தில், அசால்டாக தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கிறது அரசு பள்ளிகள்..

அந்த வகையில் தனி கவனம் பெறுகிறது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி.

கடந்த 1987ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இப்பள்ளியில், பாளாம்புத்தூர், வளத்தான் தெரு, புலவன்காடு, நெடுவாக்கோட்டை, பொய்யுண்டார் குடிகாடு, மண்டலகோட்டை, தெலுங்கான் குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் 1987 முதல் 23 முறை 10ம் வகுப்பில் மாணவ, மாணவிகள் 100 விழுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சியை வழங்கிய நிலையில், இந்த ஆண்டும் 100 விழுக்காடு தேர்ச்சி பதிவாகியுள்ளது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களே காரணம் என்கின்றனர் அந்த கிராம மக்கள். காரணம் தனியார் பள்ளிக்கு நிகராக தங்கள் கிராமத்து பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஏதுவாக வாகன வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்