டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு | Dengue Fever | Thanthi TV

Update: 2024-11-23 02:32 GMT

தாளவாடி மலைப்பகுதி ஜீரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார் - வனஜா தம்பதியரின் மகள் மௌனிகா, பனஹள்ளி கிராமத்தில் உள்ள மரிய தீப்தி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு மௌனிகாவிற்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடி பகுதியில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிலையில் காய்ச்சல் பாதிப்பு குறையாததால் கர்நாடக மாநிலம் மைசூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதிக்கப்பட்டதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து மௌனிகாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி இறந்த சம்பவம் தாளவாடி மலைப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்