"மொத்த சிறுநீரகம் தேவை 40,000.. ஆனால் கிடைப்பது 4000".. மருத்துவர் சொன்ன ரிப்போர்ட்
உலக சிறுநீரக தினத்தையொட்டி ஈரோட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களை கெளரவிப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த, சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன், தமிழகத்தில் 40ஆயிரம் பேர் சிறுநீரக தானத்திற்காக காத்திருக்கும் நிலையில், 4ஆயிரம் பேருக்கு மட்டுமே சிறுநீரக தானம் கிடைப்பதாக தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரக தானம் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் உயிரோடு இருப்பவர்கள் தான் அதிகம் தானம் செய்வதாகவும் கூறினார்.