நாம் தமிழர் கட்சியினர் அமைதி பேரணி நடத்த காவல்துறையினர் மாற்று இடம் வழங்கியுள்ளனர்.
திருப்போரூரில் பஞ்சமி நிலம் மீட்பு, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைதிப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்த வழக்கில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் காவல்துறையினர் கூறும் இடத்தில் பேரணி நடத்த கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர், மாற்று இடமாக தண்டலம் பகுதியில் இருந்து திருப்போரூர் அம்பேத்கர் சிலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைதிப் பேரணியும், அதன் பிறகு பொதுக் கூட்டமும் நடத்திக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளார்.