ஹோலி கொண்டாட்டத்தில் வெடித்த கலவரம் - உடைப்பு..எரிப்பு.. எமர்ஜென்சி வார்டில் பலர்
ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கோர்தம்பா Ghorthamba என்ற இடத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது இருசமூகத்தினர் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பலர் காயமடைந்தனர்.
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சமூகவிரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.