"எப்படியாவது பார்த்திடனும்..." - சென்னை ECR-ல் 20,000 பேர்... கடைசியில் பெரும் ஏமாற்றம்

Update: 2025-01-12 06:11 GMT

திருவிடந்தையில் நடைபெறும் பலூன் திருவிழாவில், பலூன்கள் பறக்காததால் ஆர்வத்துடன் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் 3 நாட்கள் நடைபெறும் பலூன் திருவிழா, கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. முதல்நாளில் பத்துக்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான நேற்று சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலூன்கள் பறப்பதை காண ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், வானிலை ஒத்துழைக்காததாலும் பலூன்களை பறக்க விடுவதில் சிக்கல் நீடித்தது. பின்னர் நீண்ட முயற்சிக்குப் பின் 5 நிமிடங்கள் வரை கேமரான் பலூன் வானில் பறக்க விடப்பட்டது. தொடர்ந்து எந்திரன் டூ பாயின்ட் ஓ படம் பொறித்த பலூன், காற்றில் லேசாக மேலெழும்பி சரிந்து விழுந்தது. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், பலூன்களை தாங்கிப் பிடிக்கும் மூங்கில் தொட்டிகளில் நின்றபடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தனர். தொடர்ந்து அனைவரும் கிளம்பிய நிலையில், திருவிடந்தை இ.சி.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்