திருச்செந்தூர் கடலில் கிடைத்த பொக்கிஷம் - கண்டு வியக்கும் பக்தர்கள்

Update: 2025-01-12 10:01 GMT

திருச்செந்தூர் கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள் கிடைக்கப்பெற்று வரும் சூழலில், மண்ணில் புதைந்து கிடந்த 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலை கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக திருச்செந்தூரில் நீடித்து வரும் கடல் அரிப்பால், கிடைக்கப்பெற்றுள்ள முனிவர் சிலை மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு கைகளிலும் ருத்ராட்சம் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் முனிவர் சிலை, சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளது. அதே போல், அதன் அருகே மற்றொரு நாகர் சிலையும், பெண் உருவம் கொண்ட ஒரு அடி உயரமுள்ள மற்றொரு சிலையும் கிடைத்துள்ளது. இதுபோல் தொடர்ந்து கடற்கரையில் கிடைக்கும் சிலைகளை பாதுகாக்க அரசு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்