பொங்கல் அன்று யுஜிசி - நெட் தேர்வு! மத்திய அரசு மாற்றாவிட்டால்.. எச்சரிக்கும் எம்.எல்.ஏ எழிலரசன்
“யுஜிசி - நெட்” தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யாவிட்டால், திமுக மாணவரணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொங்கல் பண்டிகையான ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளின் போது, யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழர்களின் பண்பாட்டையும், உணர்வுகளையும் அவமதிக்கும் செயல் என குறிப்பிட்ட அவர், தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தேர்வு அட்டவணையை மாற்றம் செய்யாவிடில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனையை பெற்று, மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படும் என எம்.எல்.ஏ எழிலரசன் எச்சரித்துள்ளார்.