
ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பொருட்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பணம் கட்டியவர்கள் நெருக்கடி கொடுத்ததால் கார்த்திக்குமாரின் கர்ப்பிணி மனைவி உஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உஷாவுக்கு திருமணம் ஆகி 2 வருடம் மட்டும் ஆவதால் அவரது தற்கொலை குறித்து ஒசூர் சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.