"தவறினால்.." - நாய் வளர்ப்பவர்களுக்கு பறந்த எச்சரிக்கை

Update: 2025-03-18 07:50 GMT

சென்னையில் பொது இடங்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வரும் போது வாய்மூடி அணிவிக்காவிட்டால் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன, இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், விதிமுறைகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி பொது வெளிக்கு அழைத்து வரும் போது வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் வாய்மூடி அணிவிக்க வேண்டும், தவறும் பட்சத்தில், 1,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செயதுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்