இயேசு மீது போர்த்திய துணியின் நகல் நீலகிரி ஆலயத்தில்..பணிந்து நின்ற மக்கள்

Update: 2025-03-18 07:07 GMT

இயேசு கிறிஸ்து மீது போர்த்திய துணியின் நகலை, உதகையில் உள்ள தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் அந்த துணியை தொட்டு வணங்கி பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர் நீத்த பின் வெள்ளை நிற துணியால் சுத்தி அடக்கம் செய்தனர். தற்பொழுது வரை அந்த துணி இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் ஒரு நகல் உதகையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, துணி நகல், குன்னூரில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் வைக்கப்பட்டு பின்பு கேரளா எடுத்துச் செல்லப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்