நடுரோட்டில் உருட்டு கட்டையால் மாறி மாறி தாக்கி கொண்ட குடும்பம்.. திண்டுக்கலில் பரபரப்பு

Update: 2025-03-18 08:03 GMT

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில், கணவன்-மனைவி குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். நாகம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ்- கீதா தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்டதை அடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பேர், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்