குழந்தையோடு வந்த இளம் பெண்ணுக்கு உதை... நடுகாட்டில் பிள்ளையோடு கதறவிட்ட அதிர்ச்சி
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணை காலால் எட்டி உதைத்து வனத்துறை ஊழியர்கள் அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது.
ஏமனூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அம்சா, தனது குழந்தை மற்றும் மாமனாருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வழிமறித்த வனத்துறை அலுவலர் ரேஞ்சர் பெரியண்ணன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர், இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்று காலால் எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இளம்பெண்ணின் ஆடைகளை கைகளால் கிழித்தும் மானபங்கப்படுத்திவிட்டு, நடுக்காட்டில் குழந்தையோடு விட்டுவிட்டு சென்றுள்ளனர். தற்போது, பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஏரியூர் போலீஸில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. ஆத்திரம் அடைந்த ஏமனூர் கிராமமக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.