குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி வரை இன்று வரை 27 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், 20 பேர் குணமடைந்தனர். தற்போது 7 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவோர்களை, மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது.