மருத்துவமனையில் மனைவி- முதியவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை

Update: 2024-11-27 03:24 GMT

இரணியல் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த 80 வயது முதியவரான சந்தனமரியானுக்கு, மேரி ரீத்தாமாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். சந்தனமரியான் தனது மனைவியுடன் இளைய மகன் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மேரி ரீத்தாமாளுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மனைவியை அருகே இருந்து கவனித்து வந்த சந்தனமரியான், மனைவி கஷ்டப்படுவதை தாங்க முடியாமல், மனமுடைந்து சரிவர யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி இறப்பிற்கு முன் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்த அவர், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய உடலை, இரணியல் போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி 52 ஆண்டுகள் கடந்தும் மனைவியின் மீதுள்ள அதீத அன்பால், 80 வயது முதியவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்