பைக் திருடிய இளைஞருக்கு.. பொதுமக்கள் செய்த தரமான சம்பவம் - தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் பைக் திருடிய இளைஞரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அபிஷேக் என்பவரது இருசக்கர வாகனம் திருடப்பட்ட நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஜெயசுதன் என்பவர் ஓட்டி வந்த பைக் அபிஷேக்கிற்கு சொந்தமானது என தெரிவந்தது. இதனை தொடர்ந்து ஜெயசுதன் மற்றொரு பைக்கை திருடியதை பார்த்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.