100 சதவீதம் உறுதி செய்தது இந்திய வானிலை மையம்..6 மணி நேரத்தில் குபுகுபுவென கூடிய பவர்..உக்கிர புயலா?
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது....
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது....
நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 470 கி.மீ, புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கே 580 கி.மீ., சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ தொலைவிலும் மையம்...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ, நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கு திசையில் 470 சுமார் கி.மீ, புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கே 580 கி.மீ., சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது...
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... கையில் 16.4 செ.மீ. மழை பதிவு
தமிழகத்தில் அதிகபட்சமாக நாகையில் 16.4 சென்டி மீட்டர் மழை பதிவு...
திருவாரூரில் 9.6, காரைக்காலில் 9, கடலூர் மற்றும் மணல்மேட்டில் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவு....
சென்னை பள்ளிகரணையில் 8.5, தரமணியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...