திருவாரூரை மிதக்க விட்ட `ஃபெங்கல்’ - உக்கிரத்தை கண்டு கலங்கி நிற்கும் மக்கள்
திருவாரூரில், நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். நன்னிலம் அருகே சன்னாநல்லூர் கிராமத்தில், 20 முதல் 30 நாட்களான இளம் நெற்பயிர்களை மழைநீர் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், அதனை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மழையால் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்