தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் படுகொலை - வெடித்த போராட்டம்... கடலூரில் பரபரப்பு...
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கொலை செய்யப்பட்டவர் உறவினர்கள்.
கடலூர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி சங்கர் நள்ளிரவில் படுகொலை கொலை.
கொலை செய்யப்பட்ட சங்கரின் உறவினர்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க கோரி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலை செய்த சதீஷ் மற்றும் அன்பு ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.