அமைச்சர் வாகனத்தை மறித்த மக்கள்...உடனே கொடுத்த உறுதி - பரபரப்பு காட்சிகள்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அடிப்படை வசதி செய்து தராததாக கூறி, 2 இடங்களில் அமைச்சர் சி.வி.கணேசன் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போது, அமைச்சர் இறங்கி வந்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்த நிலையில், விரைந்து திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.