தமிழகத்தில் பிறை தென்பட்டதால் இன்று (12ம் தேதி) முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமத் அயூப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில், இஸ்லாமியர்கள் புனித ரமலான் சிறப்பு தொழுகையை தொடங்கினர். நாகூர் ஆண்டவர் தர்காவில் துவங்கிய சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் முதல் நாள் ரமலான் விரதத்தை துவங்கினர்.