#BREAKING | குடும்பமாக ஆனந்த குளியல்..நீரில் மூழ்கி அடங்கிய 3 உயிர்கள்..கதறி அழும் உறவினர்கள்
சென்னை பகுதியைச் சேர்ந்த பத்மா வயது 60 தனது பேரன் தீபக்16, மற்றும் உறவினர் குழந்தை வினிஷா 9 ஆகியோருடன் உத்திரமேரூர் அருகே உள்ள கடம்பர் கோவில் கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.இந்நிலையில் வெங்கச்சேரி செய்யாற்றில் தண்ணீர் செல்வதை காண்பதற்காக வெங்கச்சேரி தடுப்பணை அருகே குழந்தைகளோடு பார்ப்பதற்குச் சென்ற நிலையில் தண்ணீரைப் பார்த்த ஆர்வம் மிகுதியால் குழந்தைகள் குளிக்க சென்று உள்ளனர்.
இந்நிலையில் திடீரென குழந்தைகள் எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் சென்று உள்ளனர்.இதனைப் பார்த்த பத்மா குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்த நிலையில் அவரும் தண்ணீரில் அடித்துச் சென்று மூழ்கியுள்ளார்.
இதனை கவனித்த அவர்களது உறவினர் மூவரையும் காப்பாற்ற முயற்சித்து தண்ணீரில் மூழ்கிய நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்முன்னதாக தண்ணீரில் அடித்துச் சென்ற பத்மா மற்றும் குழந்தைகள் இருவரையும் மீட்க முடியாமல் போனதால் உடனடியாக உத்திரமேரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தடுப்பணியில் நீரில் மூழ்கிய மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்பின்னர் தீயணைப்புத் துறைகளில் தீவிர தேடுதலுக்கு பிறகு பத்மா, தீபக்,வினிஷா, ஆகிய மூவரின் உடலையும் தீயணைப்பு துறையினர் வெளியே எடுத்தனர். இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.