குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இடத்தில் பறிபோன உயிர் - வெளியான அதிர்ச்சி காரணம்
குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு தெப்பக்குள சுற்றுச் சுவர் மீது உறங்கிய பேருந்தின் கிளீனர் தூக்கத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் சித்திர சபை பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் இரவில் ஓய்வெடுத்துள்ளனர். பேருந்தின் கிளீனர் பாஸ்தா வீரன் சித்திர சபை தெப்பக்குள சுற்றுச்சுவர் மீது படுத்துறங்கியதாக கூறப்படுகிறது. காலையில் அவர் மாயமாகி இருந்த நிலையில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது உடைமைகள், காலணி அதே இடத்தில் இருந்ததால் தெப்பக்குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்... தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடிய போது பாஸ்தா வீரன் சடலமாக மீட்கப்பட்டார்... இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.