மீண்டும் வந்த பேருந்து சேவை... ஓட்டுனர், நடத்துனருக்கு கவுரவம்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
மீண்டும் வந்த பேருந்து சேவை... ஓட்டுனர், நடத்துனருக்கு கவுரவம்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
கோவை மாவட்டம், மருதமலை சாலையில், கல்வீரம்பாளையம் பகுதிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது மக்கள் பேருந்து வசதி கோரி வந்த நிலையில், தற்பொழுது கணுவாயில் இருந்து கல்வீரம்பாளையம் வரை அரசு பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று அதனை பொது மக்களும் ஆணிவேர் அமைப்பினரும், சோமையம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பட்டாசு
வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அந்தப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பொன்னாடை அணிவித்து நன்றிகளை
தெரிவித்துக் கொண்டனர்.