136 நாட்கள் விடுமுறை.. மாற்றி அமைக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் செயலாளர்களின் துறைகள்
முதல் அமைச்சரின் செயலாளர் அனு ஜார்ஜ் 136 நாட்கள் விடுப்பில் செல்வதையொட்டி, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனிச் செயலாளர் உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் தனிச்செயலாளர் சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, உயர்கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் இணைச் செயலாளர் லட்சுமிபதிக்கு சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.