நெருங்கியது பிரமாண்ட சுழல்...நாளைய நிலை அப்படியே தலைகீழாகும் - இந்த மாவட்ட மக்களும் ரொம்ப கவனம்

Update: 2024-12-16 10:41 GMT

நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுவையில் கன முதல் மிக கனமழையும்,

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்காலில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 18ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, கடலூர், விழுப்புரம், புதுவையில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்காலில் கனமழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்