சென்னை அண்ணா நகரில், திருமணம் செய்து வைக்ககோரி, பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது தந்தைக்கு அனுப்பி மிரட்டிய, மோசஸ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மோசஸிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.