"அவன் உன் அண்ணன் அவனை கல்யாணம் பண்ணாத" - சென்னை ஐகோர்ட்டில் மகள் காலில் விழுந்து கதறிய தாய்

Update: 2024-11-17 05:40 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தில், அண்ணன் உறவுமுறை கொண்டவருடன் திருமணம் செய்துக் கொண்ட இளம் பெண் காலில் தாய் விழுந்து அழுத காட்சி நீதிபதிகளையும், அங்கிருந்தவர்களையும் கலங்கச் செய்தது.

அண்ணன் உறவுமுறைக் கொண்டவருடன் ஓடிச்சென்ற தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி சேலத்தை சேர்ந்த பெண் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது இருவரும் 3 முறை வீட்டைவிட்டு ஓடியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்து திருமணச் சட்டப்படி சகோதர - சகோதரி உறவு கொண்டவர்கள் திருமணம் செய்ய முடியாது என வாதடப்பட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கேட்ட போது, நான்கு தலைமுறைக்கு முன்புள்ள உறவின் அடிப்படையில் தான் அண்ணன் - தங்கை உறவு வரும் எனவும், தங்கள் திருமணத்தை திருமணம் சட்டம் தடை செய்யவில்லை என்றும் பதில் தெரிவித்தனர். அப்போது நீதிமன்றத்தில் இருந்த பெண்ணின் தாயார், மகள் காலில் விழுந்து, அண்ணனை திருமணம் செய்தால் ஊரே சிரிக்கும், என அழுதார்.

அதற்கு மகள், சாக வேண்டுமென்றால் என்றால் சாவு என சொன்னது, அங்கிருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரும் 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதாலும், அப்பெண் தன் சொந்த விருப்பத்தின் பேரில் சென்றுள்ளதால் சட்டவிரோத காவல் எனக் கூற முடியாது எனக் கூறி, ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். அந்த தம்பதியிடம் உங்கள் விருப்பம் போல் நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள், ஆனால், உங்கள் திருமணம் சட்டப்படி செல்லாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து தாய் அழுதுக்கொண்டே நீதிமன்ற அறையை விட்டு வெளியில் வந்தது அங்கிருந்தவர்களையும் கலங்க செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்