சென்னை நோக்கி முதல்வரை பார்க்க வந்த பெரும் படை.. கடிவாளம் போட்ட போலீசார்
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் முதலமைச்சரிடம் மனு கொடுக்க சென்னை நோக்கி சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், முதலமைச்சரிடம் நேரடியாக சென்று மனு கொடுக்க இருந்தனர். இந்நிலையில், தொழிலாளர்கள் சென்னை நோக்கி செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.