அதிர வைத்த காட்சி... பதறிய அதிகாரிகள் - ஓப்பன் எச்சரிக்கை பரபரத்த சென்னை ஸ்டான்லி மருத்துவமனை...
- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் கேண்டின் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...
- சென்னையில் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கும் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேண்டின்கள் செயல்பாடு தொடர்பாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் ஆணையர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- மருத்துவமனை வளாகத்தில் மருத்துவத்துறை சார்பில் உள்நோயாளிகளுக்கு உணவு சமைத்து வழங்கும் உணவுக்கூடம் , தனியார் சார்பில் நடத்தப்படும் நான்கு கேண்டின்கள் , ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கேண்டின் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒவ்வொன்றாக சோதனை நடத்தினர் ...
- உள்நோயாளிகளுக்கு உணவு சமைத்து வழங்கும் உணவுக் கலன்கள், பணியாளர்களின் சுத்தம் ஆகியவற்றை முதலில் நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் நோயாளிகளுக்கு வழங்கும் முட்டை, பால் , பிரட் உள்ளிட்டவற்றின் தரத்தையும் பரிசோதனை செய்தனர்.
- தொடர்ந்து மருத்துவக் கல்லூரி கேன்டினில் ஆய்வு செய்த அதிகாரிகள் உணவுப் பொருட்கள் அனைத்தும் தரமாகத்தான் செய்கிறீர்களா , விற்பனை செய்யபடும் பொருட்கள் எங்கே தயாரிக்கப்படுகிறது ? என கேள்விகளை அடுக்கினர்...
- தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே மற்ற பிற கேண்டின்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தனியார் கேன்டீன்கள் அனைத்திலும் அலுமினியம் பேப்பர்களில் உணவு மற்றும் தேநீர் பார்சல் செய்து வணங்குவதைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள், இதனை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினர்..
- அலுமினியம் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ள அதிகாரிகள், தொடர்ந்து பயன்படுத்தும் பட்சத்தில் முதல்முறையாக 2000 ரூபாய் அபராதமும் , இரண்டாவது முறை 5000 ரூபாயும் , மூன்றாவது முறையாக தொடரும் பட்சத்தில் 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்...