சென்னை ராயபுரம் கிழக்கு கல் மண்டபம் சாலையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் காலகட்டம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 90 ஆண்டுகள் பழமையான இக்கட்டடமானது சட்டம் - ஒழுங்கு காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது. தற்போது போக்குவரத்து காவல் நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டடத்தின் ஒரு பக்கத்தில் உள்ள சுற்று சுவரானது சாலையில் சரிந்து விழுந்தது. இதன் காரணமாக இந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேற்கொண்டு விபத்துக்களை தவிர்க்க இந்த கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு புது கட்டிடம் கட்ட வேண்டும் என போக்குவரத்து காவல்நிலைய போலீசார் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.