சென்னையை நடுங்கவிட்ட இரவு..சிறைக் கதவு திறந்த வேகத்தில் பழிதீர்க்க பாய்ந்து துடித்த உயிர்

Update: 2024-11-24 03:50 GMT

எண்ணூர் பகுதியில் தனது பகையாளிகளை பழி தீர்க்க சென்ற நபர், பகையாளிகள் கையாலேயே குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் பாலா. குற்றவாளியான இவர் சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார். பாலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், சூர்யா, ஈஸ்வர பாண்டியன் என்கின்ற மூன்று பேருடன் முன்பகை இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அந்த மூன்று பேரையும் தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளார் பாலா. அதன் படி தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு, அதே தெருவில் வசிக்க கூடிய தனது முன்னாள் பகையாளிகள் மூவரிடமும் சண்டையிட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், பாலா கொண்டு சென்ற கத்தியை பிடுங்கி அவரை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பாலாவின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் விரட்டி பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த கொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்