ஒரு கையெழுத்துக்கு `800'... அரசு மருத்துவரின் தலையெழுத்தை மாற்றிய வீடியோ - சென்னையில் ஷாக் சம்பவம்
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், உடல் தகுதி சான்றிதழ் மற்றும் விடுமுறை சான்றிதழில் மருத்துவர் கையெழுத்து போடுவதற்கு 750 ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
பெண் ஊழியர், இரண்டு படிவத்திற்கும் சேர்த்து 800 ரூபாய் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், கையெழுத்து வாங்கிக் கொடுத்ததற்கு 50 ரூபாய் பணம் பெற்றதாகவும் தெரிகிறது. மருத்துவமனைக்கு வரும் ஏராளமானவர்களிடம் இதுபோன்று சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சமாக பணம் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.