அபராதம் விதிப்பதற்காக காரில் ஏறிய போக்குவரத்து காவலர் 100 கி.மீ. வேகத்தில் காரை ஒட்டிய டிரைவர் போக்குவரத்து காவலருக்கு நடந்த சோகம்
சென்னை திருவான்மியூரில் போக்குவரத்து பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் தர்மன். இவர், காமராஜர் அவென்யூ பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அபராதம் விதிக்கும் நோக்கில், அந்தக் காரில் ஏறியபடி, ஓட்டுநரிடம் சாலையின் ஓரம் காரை நிறுத்துமாறு போக்குவரத்து காவலர் தர்மன் கூறியுள்ளார். ஆனால், கார் ஓட்டுநர் திடீரென காரை 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க, கட்டுப்பாட்டை இழந்த கார், கன்வென்சன் ஹால் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதுடன், காரில் பயணித்த போக்குவரத்து காவலர் தர்மன் மற்றும் காரில் பயணம் செய்த இருவர் என 3 பேருக்கும் கால்முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.