"ஒரு எலும்பு கூட தேறாது" - ஆபத்தோடு விளையாடிய தோழன், தோழி.. தீயாய் சுற்றும் பதைபதைப்பு வீடியோ
"ஒரு எலும்பு கூட தேறாது" - ஆபத்தோடு விளையாடிய தோழன், தோழி.. தீயாய் சுற்றும் பதைபதைப்பு வீடியோ
சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் தன் தோழியை அமர வைத்துக் கொண்டு சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது... காவல்துறை பாதுகாப்பையும் மீறி ஆபத்தான வகையில் அந்த இளைஞர் பைக் வீலிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்... பைக் ஓட்டும் இளைஞர் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த அவரது தோழியோ எவ்வித பாதுகாப்புமின்றி அமர்ந்துள்ளார்.. பின்னணியில் எந்திரன் பாடலை ஒலிக்க விட்டபடி இந்த ஆபத்தான சாகசத்தை ஏதோ சாதனை போல வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்...