BREAKING || முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி - நாளை காலை என்னாகும்? பரபரப்பில் மக்கள்

Update: 2024-12-12 16:07 GMT

22 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரி

நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால் பரபரப்பு

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது மேலும் ஏரிக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது

ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால்

நாளை காலைக்குள் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்திலும் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நாளை உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்

தொடர்ந்து நீர்மட்டம் உயரும் நிலையில் உபரணி திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்