CBSE, இதர கல்வி வாரியங்களின் கீழ், படிக்கும் மாணவர்களுக்கு.. ஸ்ட்ரிக்டாக சொன்ன பள்ளி கல்வித்துறை

Update: 2024-05-22 03:35 GMT

சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் கீழ், தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள், அடுத்த ஆண்டு தமிழ் பாடத்தில் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என்று, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ் பாடத்தில் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுப்பின்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிராத பிற மாணவர்கள் 6 ஆயிரம் பேர் படிப்பது தெரிய வந்துள்ளது. இந்த மாணவர்களும் பிற கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக எழுத வேண்டும் என்றும், அனைத்து சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், இதற்கு தேவையான நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்