உடைக்கப்பட்ட சீல்.. கோயில் மீண்டும் திறப்பு"இனி பயந்து பயந்து பார்க்க வேண்டாம்" ஆனந்த கடலில் பட்டியலின மக்கள்

Update: 2024-09-16 15:58 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, சீல் வைக்கப்பட்ட கோயில் திறக்கப்பட்டு, பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர். வழுதலம்பேடு கிராமத்தில் உள்ள எட்டியம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது, கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக, பட்டியலின மக்களுக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் கோயிலை பூட்டி சீல் வைத்தது. தொடர்ந்து, இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இன்று ஆட்சியர் முன்னிலையில் கோயிலை திறந்து வைத்ததுடன், பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்