ஈரோட்டை சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயி கார் ஓட்டி பழகியபோது வீட்டின் முன் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளார். இதையடுத்து கிணற்றில் காருடன் விழுந்தவரை மீட்க சென்ற பவானிசாகரை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி மூர்த்தியும் மாயமான நிலையில், இன்று அதிகாலை இருவரையும் தீயணைப்புத்துறையினர் சடலங்களாக மீட்டனர். பின்னர் சத்தியமங்கலம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.