பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் கஞ்சா | எம்எல்ஏ எழுப்பிய அதிரடி கேள்வி

Update: 2024-01-11 03:34 GMT

பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. அதில், பொதுமக்கள் தங்கள் நீண்ட கால கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த முகாமை தொடங்கி வைத்த பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, ஒவ்வொரு அரங்காக பார்வையிட்டார். அப்போது போலீசார் அமர்ந்திருந்த அரங்கிற்கு சென்ற அவர், பூந்தமல்லி பகுதியில் அதிகளவில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை ஆகிறது என்றும், பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு செல்கின்றனர் என்றும் கூறி, எங்கு புகார் கொடுப்பது என்று போலீசார் முன்னிலையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு நடைபெற்ற முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்களை வழங்கி விட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்