ATM-ஐ உடைக்க வந்த திருடன்...விரக்தியில் செய்த காரியம் - பரபரப்பு காட்சிகள்
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் சிசிடிவி கேமராவை கொள்ளையன் கழற்றிச் சென்ற பரபரப்பு சம்பவம் காரைக்காலில் நிகழ்ந்துள்ளது...காரைக்காலின் முக்கிய பகுதியில் உள்ள லெமர் வீதியில் அமைந்துள்ள ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது... விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்... பணத்தைக் கொள்ளையடிக்க முடியாததால் திருடன் சிசிடிவி கேமராவை உடைத்து திருடிச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர்... அதற்குரிய தனியார் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நாகூரைச் சேர்ந்த உணவக தொழிலாளி தவ்பீத் அகமது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது... காரைக்காலில் தனது அத்தை வீட்டில் தங்கி உள்ள அவர், மது அருந்தி விட்டு கடும் போதையில் மீண்டும் மது அருந்த பணம் இல்லாததால் ஏடிஎம்மில் திருட முயன்றது அம்பலமாகியுள்ளது... போலீசார் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராவை உடைத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. போலீசார் தவ்பீத் அகமதுவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.