தூங்கி கொண்டிருந்த கணவன்.. பிறப்பு உறுப்பை அறுத்து துடிதுடிக்க கொன்ற மனைவி - கொடூர பின்னணி

Update: 2024-12-18 01:53 GMT

அரியலூர் அருகே குடிபோதையில் கொடுமைப்படுத்திய கணவனின் பிறப்பு உறுப்பை மனைவி அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செந்துறை அடுத்துள்ள ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயியான சின்னப்பா என்பவர், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி பச்சையம்மாளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த அவர் மனைவி மற்றும் மகளை தாக்கி உள்ளார். இதனால் அச்சமடைந்த அவர்கள் இருவரும் பக்கத்து வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். கணவரின் கொடுமை தாங்காமல் கோபமடைந்த பச்சையம்மாள், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். நள்ளிரவில் போதையில் தூங்கி கொண்டிருந்த கணவரை இரும்பு பைப்பால் தாக்கி உள்ளார். உயிர் போகாததால் அரிவாளால் கை, கால் நரம்புகளை வெட்டி உள்ளார். ஆத்திரம் தீராத அவர் பிறப்புறுப்பையும் அறுத்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, கணவர் தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து விசாரித்ததில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். உடனே பச்சையம்மாளை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கணவரின் பிறப்புறுப்பை மனைவியே அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்