அண்ணா பல்கலை. சம்பவம்..! அடுத்த கட்டமாக டைம் குறித்த அண்ணாமலை.. அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு

Update: 2024-12-31 13:16 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, வரும் 3-ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னை நோக்கி நீதிப் பேரணி தொடங்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், முழு உண்மையை வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்தும் இந்தப் பேரணி நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக தமிழ்நாடு மகளிர் அணி மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநரை சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்