கோயில் சப்பர ஊர்வலத்தில் பயங்கரம் - பேரதிர்ச்சி காட்சிகள் | andhra pradesh

Update: 2024-11-17 06:25 GMT

ஆந்திராவில், கோயில் சப்பர ஊர்வலத்தின்போது தோரணம் தீப்பிடித்து எரிந்து 3 பேர் காயமடைந்தனர். அனக்காப்பள்ளி நகரில் உள்ள கொல்லவீதியில், கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக இலை தழைகளைப் பறித்து வந்து தோரணமாக கட்டி ஜுவாலை தோரணம் என்ற பெயரில் அதற்கு தீ மூட்டினர். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து, அருகில் இருந்த மரத்திற்கு தீ பரவியது. பின்னர் தீ கங்குகள் கீழே விழுந்து 3 பக்தர்கள் காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்