துபாயில் நடந்த 24H கார் பந்தயத்தில் சாதனை படைத்த நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை அஜித்குமார்-ரேஸிங்கில் பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். நாட்டுக்கும், தமிழகத்திற்கும் தொடர் வெற்றிகளை வழங்க அஜித்குமாரை வாழ்த்துவதாகவும் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.